Search This Blog

Wednesday, December 14, 2011

3 திரைப்படத்தின் "வை திஸ் கொலவெறி...." lyrics

Hello Boys.. I am Singing Song..
Soup Song.. Flop Song..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Rhythm Correct..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Maintain This..
Why This Kolaveri? Dee..
Distance'la Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Mama, Notes Eduthuko..
Apdiye Kaila Šnacks Èduthukø..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama..
Ok Mama.. Nøw Tune Change'ju..
Kaila Glass'su.. Only Ènglish'sa..
Hand'la Glass'su
Glass'la Šcøtch'chu
Èyes'su Full'la Tear'ru
Èmpty Life'fu, Girl Cøme'mu
Life'fu Reverse'su Gear'ru
Løve'vu Løve'vu Oh My Løve'vu
Yøu Šhøw Tø Me Bøw'vu
Cøw'vu Cøw'vu Høly Cøw'vu
I Want Yøu Here Nøw'vu
Gød I am Dying Nøw'vu
Šhe Is Happy Høw'vu?
This Šøng'gu Før Šøup Bøys'su
We Døn't Have Chøice'su
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee


Fløp Šøng..

வேட்டை திரைப்படத்தின் பப்பா பப்பா lyrics

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா
ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..
ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா..


ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..

Monday, December 12, 2011

Super star ரஜினிகாந்த்




இன்று சூப்பர்ஸ்டாரின் பிறந்த நாள்.12.12.2011


ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1950)ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார்.

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரசினிகாந்து நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகியும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜி உம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Year Title Role(s)
Awards
1975 அபூர்வ ராகங்கள் அபஸ்வரம்

1976 மூன்று முடிச்சு


1977 16 வயதினிலே பரட்டை

புவனா ஒரு கேள்விக்குறி அரவிந்த்

1978 முள்ளும் மலரும் காளி
தமிழக அரச திரைப்பட விருதுகள்
1979 நினைத்தாலே இனிக்கும் தீபக்

ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம்

1980 பில்லா பில்லா,
ராஜா


முரட்டு காளை காளையன்

1981 தில்லு முல்லு இந்திரன் /
சந்திரன்


1982 மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்

தமிழக அரச திரைப்பட விருதுகள்
1984 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம்
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1985 ஸ்ரீ ராகவேந்திரா ராகவேந்திர சுவாமி

1991 தளபதி சூர்யா

1992 அண்ணாமலை அண்ணாமலை

1993 எஜமான் வாணவராயன்

1995 பாட்சா மாணிக்கம்

முத்து முத்து,
எஜமான்

தமிழக அரச திரைப்பட விருதுகள்
1997 அருணாசலம் அருணாசலம் ,
வேதாசலம்


1999 படையப்பா ஆறுபடையப்பன்
தமிழக அரச திரைப்பட விருதுகள்
2005 சந்திரமுகி டாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்

தமிழக அரச திரைப்பட விருதுகள்
2007 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் தமிழ் தமிழக அரச திரைப்பட விருதுகள்
Nominated—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2010 எந்திரன் டாக்டர். வசீகரன்,
சிட்டி
தமிழ் Nominated—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது

Sunday, December 11, 2011

சங்கமம் இசை இறுவட்டு

 
யாழ் இந்து மாணவர்களின் படைப்பு 
யாழ். இந்துவின் சங்கமம் பிரமாண்டமான இசைத்தொகுப்பு

சாதனையாளர்களை, திறமையாளர்களை சிறுவயதில் இருந்தே உருவாக்குவது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் வெளியீடான சங்கமம் இசைத்தொகுப்பு நேற்றைய தினம் கல்லூரியின் குமார சுவாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

சங்கமம் என்ற பெயருக்கிணங்க கல்லூரியின் இந்தக் கால மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவர்கள் ஆசிரியர்களும் இந்தப் படைப்பில் ஒன்றாகச் சங்கமித்துள்ளனர். மொத்தமாகப் பத்துப் பாடல்களைக் கொண்டுள்ள இவ் இசைத்தொகுப்பு கல்லூரி வாழ்க்கை, சிறுவர்களின் திறமைகள், கல்வி, நட்பு, வீரம் எனப் பல்சுவை அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு காத்திரமான படைப்பாக உருவாகியுள்ளது.

யாழ். மண்ணில் இருந்து வெளியாகும் இந்த இசைத்தொகுப்பின் அனைத்துப் பாடல்களுக்கும் இந்துவின் மைந்தன் சத்தியன் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். யாழ் .இந்துவின் கல்வித் தெய்வம், காவல் தெய்வம் ஞானவைரவ பெருமான். அவருடைய அருட்கடாட்சத்தால் இன்று சாதனை படைத்துள்ளோர் பலர். ஞானவைரவப் பெருமானின் அருளால் இந்துவின் மைந்தர்கள் எங்கு சென்றாலும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை இன்றும் பலரிடம் உண்டு. அதுவே உண்மையும் கூட. அந்த நம்பிக்கைக்கிணங்க மாணவர்களின் படைப்பான சங்கமமும் ஞானவைரவ பெரு மானை போற்றும் வகையில் பாடல் ஒன்றை முதல்பாடலாக வெளியிடுகின்றது. ஆசிரியர் நா.விமல நாதன் இயற்றிய பாடலைப் பழைய மாணவன் குகானந்தன் பாடியுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பற்றியும் அவர்களது குறும்புத்தனம்இ புத்திசாலித்தனம் என்பனவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய பாடலாக சிறுவர்கள் நாளைய எதிர்காலம்.. என்ற பாடல் அமைகின்றது. இந்தப் பாடலைத் தரம் 8 மாணவன் திவாகரன் எழுதியுள்ளார். தரம் 10 மாணவன் மயுரேசன் பாடியுள்ளார். விளையும் பயிர்களை முளையிலேயே கண்டுவிடலாம்.
நீங்காத நீண்ட புகழுடன் விளங்குவது இந்துக்கல்லூரி. கல்லூரியின் புகழை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்த எங்கள் படை இது இந்து படை... பாடலைப் பழைய மாணவன் மதுசன் எழுதியுள்ளார். இதனை வீரம் தெறிக்கும் வண்ணம் ஜெயடினேஸ் மற்றும் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

செம்மையான மொழியான நம் அடையாளமான தமிழ் மொழியைப் போற்றும் வண்ணம் மற்றுமொரு தமிழ்மொழி வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ள பாட லைப் பழைய மாணவன் பாலசண்முகன் எழுதியுள்ளார். இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கலாநிதி தர்ஸனன் அவர்கள். ஆசிரியர்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவ் ஆசிரியர்களின் பெருமையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்கொணரும் பாடலான எனக்கொரு ஆசிரியர் வேண்டும்.. பாடலை நா.விமலநாதன் எழுத பாடலை பாடியிருப்போர் மாணவர்களான வத்சாங்கிர சர்மா சுஜீவன் மற்றும் டினேசன் குழுவினராகும்.

பாரதி புதுமைகளினை விரும்பஇ தற்போதைய மாணவர்களும் புதுமைகள் படைப்போரே. இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்ற நோக்கில் மாணவன் மதீசன் அவர்களினால் எழுதப்பட்டு பாடலை ஜெகதீஸூடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்துக் கல்லூரியின் ஊக்கப்பாடலாக அமைந்துள்ள பாடல் பழைய மாணவன் ஒருவனின் எண்ணங்களில் உதித்த வார்த்தைக் கோர்வைகளினால் அழகேற்றப் பட்டுள்ளது. பழைய மாணவனும் ஆசிரியருமான நிஸாந்தன் அவர்களினால் எழுதப்பட்ட இந்தப் பாடலை விஸ்ணு பாடியுள்ளார்.

நட்பு வாழ்க்கையில் முக்கிய இடம் வகிப்பது அதிலும் பாடசாலை கால நட்பு ரம்மியமானது. இந்த நட்பின் பெருமையை உணர்த்தும் நட்பெனும் சொந்தம் வந்ததடா.. என்ற பாடலைத் தமது நண்பர்களுக்காக அர்ப்பணித்துள்ளார் இந்த இசைத்தொகுப்பின் ஊடாக கவிஞராக அவதாரம் எடுக்கும் மாணவன் ஜனோதீபன்.

பாடலை அழகுற பாடி பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களான பிரசாந்தன் மற்றும் தர்சனன். கல்லூரியின் துடுப்பாட்ட அணி சாதிப்பதற்கென படைக்கப்பட்ட மற்றொரு அவதாரம். இவர்களுக் கென உருவாக்கப்பட்ட பாடல் ஏற்கனவே வெளிவந்த போதிலும் மீள் வடிவத்துடன் போல் வந்தால் அடிடா.. பாடலை இளசுகள் இசை அணியினர் இயற்ற ஜெகதீஸ் மற்றும் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

வாழ்க்கையின் ஆரம்ப பகுதியின் பெரும்பாகத்தை எடுத்துக்கொள்வது பள்ளிப்பருவம். இந்த பருவம் மீண்டும் வருமா? மீண்டும் வராதா? என ஏங்குவோர் பலர். அவர்களுக்கான ஆறுதல் பாடலாகவும் அவர்கள் அனைவரினதும் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்கும் மீண்டும் வருமா..? என்ற பாடலை மாணவன் மதீசன் எழுதிப் பாடியுள்ளார்.

இசைக்கும் படைப்பாற்றலுக்கும் வயது வரையறை இல்லை என்பதை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர் யாழ் இந்துவின் மைந்தர்கள். பள்ளிப் பருவத்திலேயே மிகவும் பிரமாண்டமான இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ள இவர்கள் எதிர்காலத்தில் இசைத்துறையில் சாதிக்கவும் யாழ் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும் பல பாடல்களை வெளியிடவும் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைக் கூறி நிற்போம்.

இவர்களை வளர்த்தெடுக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சமூகத்துக்கு எமது நன்றிகளை நெஞ்சார தெரிவிக்கின்றோம். சுற்றும் உலகம் எமக்காக சுற்றும்.. சரித்திரம் நாளை நம் சாதனை பேசும்.
 மேலதிக விபரங்கள்,படங்களுக்கு...............
http://jaffnahindu.org/wall/index.php?option=com_content&task=view&id=368&Itemid=309