இன்று சூப்பர்ஸ்டாரின் பிறந்த நாள்.12.12.2011
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும்
சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு:
டிசம்பர் 12,
1950)ரஜினிகாந்த்,
டிசம்பர் 12 1950 அன்று
இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார்.


நடிகராகும் ஆவலுடன்
சென்னை வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
1975 ஆம் ஆண்டு
கே. பாலச்சந்தர் இயக்கிய
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த
மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு
16 வயதினிலே,
காயத்ரி போன்ற படங்களில்
வில்லனாக நடித்தார். பின்னர்
புவனா ஒரு கேள்விக்குறி,
முள்ளும் மலரும்,
ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார்.
பில்லா,
போக்கிரி ராசா,
முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது.
தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல
நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான
ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம்
இந்து சமயப் புனிதரான
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரசினிகாந்து நடித்து வெளிவந்த
வேலைக்காரன்,
மனிதன்,
தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த
அண்ணாமலை,
பாட்சா,
படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த
பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த
சந்திரமுகியும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த
சிவாஜி உம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment